கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி டீசர் தயார்!

நோலன் இயக்கும் தி ஒடிசி படத்தின் டீசர் குறித்து...
கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி டீசர் தயார்!
Published on
Updated on
1 min read

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவாகும் ஒடிசி படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.

விஞ்ஞானத்தை திரைப்படுத்திய அறிவார்ந்த இயக்குநர் எனப் பெயரெடுத்தவர் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன். இதுவரை, இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றியை மட்டுமே பெற்றிருக்கின்றன. மொமண்டோ, பேட்மேன், இண்டர்ஸ்டெல்லர் என நீளும் பட்டியலில் இறுதியாக ஓப்பன்ஹெய்மரும் ஆஸ்கர் விருதுகளைத் தட்டியது.

பல விமர்சகர்களாலும் திரைத்துறைக்கு வந்த விஞ்ஞானி என்றே நோலன் பாராட்டப்படுகிறார். அண்மையில், இங்கிலாந்து அரசு நோலனுக்கு சர் பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

தற்போது, பிரபல கிரேக்க கவிஞரான ஹோமர் எழுதிய ‘த ஒடிசி (the odyssey)' கவிதையை நோலன் இயக்கி வருகிறார். படத்திற்கும் அதே பெயரையே வைத்துள்ளனர். உலகம் முழுவதும் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் புத்தம் புதிய ஐமேக்ஸ் தரத்தில் உருவாகும் என்றும் கூறியுள்ளனர்.

படத்தின் நாயகனாக மெட் டாமன் (Matt doman) நடிக்கிறார். இந்த நிலையில், படத்தின் முதல் டீசரை தயார் செய்துள்ளனர். 1.16 நிமிடம் கால அளவு கொண்ட இந்த டீசர் ஜூராசிக் வொர்ல்ட் - ரீபெர்த் படம் வெளியாகும் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

Summary

christopher nolan's the Odyssey movie teaser ready to show

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com