ஹிட்லருக்கு ஆதரவாக பாடல்..! ஆஸி.யில் நுழைய அமெரிக்க பாடகருக்குத் தடை!

அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆஸி.யில் நுழைய தடை விதிக்கப்பட்டது குறித்து...
Kanye West
கன்யா வெஸ்ட்ENS
Published on
Updated on
1 min read

அமெரிக்காவைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் கன்யா வெஸ்ட் ஆஸ்திரேலியாவில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராப் இசைக் கலைஞரான கன்யா வெஸ்ட் சமீபத்தில் அடோல்ஃப் ஹிட்லரை ஆதரித்து ’ஹெய்ல் ஹிட்லர்’ என்ற பாடலை வெளியிட்டார்.

இந்தப் பாடலில் யூத மக்கள் மீது வெறுப்பைப் பரப்புவது போலும் ஹிட்லருக்கு ஆதரவாகவும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதால் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.

இதனையொட்டி பல்வேறு ஸ்டீரிமிங் தளங்களில் இந்தப் பாடல் தடைசெய்யப்பட்டது.

சமீபத்தில் தன்னை நாஜியாக அடையாளப்படுத்திக் கொண்ட கன்யா வெஸ்ட் ஆஸி. நாட்டைச் சேர்ந்த டிசைனர் பியான்கா சென்சோரியை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் டோனி புர்க், “யூத மக்களின் மீதான வெறுப்பை யாராவது பகுத்தறிவான செயல் எனக் கூறினால் அவர்களை எங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டேன்.

கன்யா வெஸ்ட் ஆஸி.க்கு நீண்ட காலமாக வந்திருக்கிறார். பல அவதூறான கருத்துகளை இதற்கு முன்பும் தெரிவித்துள்ளார். தற்போது, ஹிட்லருக்கு ஆதரவாக பாடலை வெளியிட்டுள்ளதால் அவருக்கு ஆஸி.யில் நுழைய விசா மறுக்கப்டுகிறது” எனக் கூறியுள்ளார்.

ராப் பாடகர் கன்யா வெஸ்ட்டுக்கு இது நிரந்தர தடையா அல்லது தற்காலிகமானதா எனத் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

அவதூறு கருத்துகளால் கடந்த 2022-இல் அடிடாஸ் நிறுவனம் இவருடனான ஒப்பந்தத்தை நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Summary

The US rapper and artist Kanye West has been barred from travelling to Australia after the release of his widely condemned song Heil Hitler, which has been banned on Apple Music, Spotify and YouTube.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com