

மார்வெல் நிறுவனத்தின் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் திரைப்படங்களின் நடிகர் ஜூலியன் மெக்மஹோன் புற்றுநோயால் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஜூலியன் மெக்மஹோன் (வயது 56) கடந்த சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 2 ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக, அவரது மனைவி கெல்லி மெக்மஹோன் இன்று (ஜூலை 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்வெல் நிறுவனத்தின் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் திரைப்படங்களில், டாக்டர் டூம் எனும் சூப்பர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், நடிகர் ஜூலியன் உலகளவில் ரசிகர்கள் இடையே பிரபலமானார்.
இத்துடன், பல்வேறு திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்துள்ள ஜூலியனின் மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த 1968-ம் ஆண்டு, சிட்ணி நகரத்தில் பிறந்த ஜூலியன் மெக்மஹோன், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் பில்லி மெக்மஹோனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கல் மேட்சன் காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.