நடிகர் பரத்தின் காளிதாஸ் - 2 டீசர்!

காளிதாஸ் - 2 படத்தின் டீசர் வெளியீடு குறித்து....
காளிதாஸ்  - 2 டீசர்.
காளிதாஸ் - 2 டீசர்.
Published on
Updated on
1 min read

நடிகர் பரத் நடித்துள்ள காளிதாஸ் 2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் பரத். பின்னர் காதல், வெயில், பழனி, எம்டன் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

இதனிடையே கடந்த 2019இல் காளிதாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். ஸ்ரீ செந்தில் இயக்கிய இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடிகர் பரத் நடிக்கிறார்.

இந்தப் படத்தினை ஸ்கை பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி நடிக்கிறார்கள்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு பூவே உனக்காக சங்கீதா, இப்படத்தின் மூலம் திரும்பவும் நடிக்கிறார்.

இந்த நிலையில், காளிதாஸ் - 2 படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Summary

The teaser of the film Kalidas 2, starring actor Bharath, has been released and is attracting the attention of the fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com