தனுஷ் நடித்த இட்லி கடை படத்தின் முதல் பாடல் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இப்படத்தைத் தொடர்ந்து, குபேரா, தேரே இஷ்க் மெயின் படத்தில் தனுஷ் நடித்து முடித்தார். தற்போது, இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக, தனுஷ் நடிப்பில் வெளியாகும் இட்லி கடை திரைப்படம் வருகிற அக்.2 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடல் வருகிற ஜூலை 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவின் நம்.1 பணக்கார நடிகை யார் தெரியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.