கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

10 லட்சம் பார்வைகளைக் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் ஃப்ரீடம் டீசர்!

நடிகர் சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் டீசர் குறித்து...

News image

ஃப்ரீடம் பட போஸ்டர்.

படம்: எக்ஸ் / சசிகுமார்.

Updated On :3 ஜூன் 2025, 3:48 pm

DIN

நடிகர் சசிகுமார் நடித்த ஃப்ரீடம் திரைப்படத்தின் டீசர் யூடியூப் டிரெண்டிங்கில் இருக்கிறது.

ழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படம் தமிழகத்தில் 1990-களில் நடந்த ஜெயில் உடைப்பு சம்பவம் குறித்த உண்மைக் கதைகளைத் தொட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், சசிகுமாரும் லிஜோமோல் ஜோஸும் இலங்கை அகதிகளாக நடித்திருக்கின்றனர்.

இந்தப்படம் ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் சந்திக்கும் பிரச்னைகள் காட்டப்படுவதால் படம் அரசியல் ரீதியாகவும் சில விஷயங்களைப் பேசலாம் எனத் தெரிகிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றிக்குப் பின் வெளியாகும் சசிகுமார் படமென்பதால் ஃப்ரீடம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 1மில்லியன் (10 லட்சம்) பார்வைகளைத் தாண்டி யூடியூப் டிரெண்டிங்கில் 2ஆம் இடம் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.