நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ராஜாசாப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார்.
சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது. சமீபத்தில் வெளியான கல்கி ஏடி 2989 ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது.
தற்போது, ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார். ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த திரைப்படத்தின் பணிகள் முடிவடையாத காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்படம் வருகிற டிச. 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசர் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிக்க: மனுசி படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.