ஷைன் டாம் சாக்கோவை பலமுறை கண்டித்திருக்கிறேன்: ஆசிஃப் அலி

ஷைன் டாம் சாக்கோவை பலமுறை கண்டித்திருக்கிறேன்: ஆசிஃப் அலி

ஷைன் டாம் சாக்கோ குறித்து ஆசிஃப் அலி...
Published on

நடிகர் ஷைன் டாம் சாக்கோ குறித்து ஆசிஃப் அலி பேசியுள்ளார்.

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. கம்மட்டிபாடம், இஷ்க், குருப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ஷைன். 

நல்ல நடிகராக இருந்தாலும் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவார். அண்மையில், போதைப்பொருள் வழக்கில் கைதாகி அதிர்ச்சியளித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை சாக்கோ தன் குடும்பத்தினருடன் காரில் பெங்களூர் சென்றுகொண்டிருந்தபோது தருமபுரி அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஷைனின் தந்தை சிபி சாக்கோ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநரை தவிர மற்ற மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த ஷைன் திருச்சூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து பேசிய நடிகர் ஆசிஃப் அலி, “ஷைன் டாம் சாக்கோவின் குடும்பத்திற்கு நிகழ்ந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு நல்ல நண்பனாக ஷைனின் நடவடிக்கைகளுக்காக பலமுறை கண்டிருத்திருக்கிறேன். கோபப்பட்டு அறிவுரைகளையும் கூறியிருக்கிறேன். ஆனால், இப்போது ஷைன் டாம் குடும்பத்துக்கு ஆதரவாக நிற்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Open in App
Dinamani
www.dinamani.com