/

3.15 மணிநேர கால அளவு கொண்ட குபேரா!

தனுஷ் நடிப்பில் வெளியாகும் குபேரா படத்தின் கால அளவு அறிவிக்கப்பட்டுள்ளது...

News image
Updated On :9 ஜூன் 2025, 3:04 pm IST

தனுஷின் குபேரா திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளது.

நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். இதில் நாகார்ஜுனா பிரதான பாத்திரத்திலும் ராஷ்மிகா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் பான் இந்தியப் படமாக உருவாகியுள்ளது. ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

அண்மையில், ட்ரான்ஸ் ஆஃப் குபேரா (trance of kubera) எனப் பெயரிடப்பட்ட டீசர் விடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது, படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Story image

இந்த நிலையில், இப்படத்திற்குத் தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் 195 நிமிடங்கள் (3.15 மணிநேரம்) கால அளவு கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியதுடன் இவ்வளவு கால அளவுகொண்ட படம் சரியான கவனத்தைப் பெற்றுத் தருமா என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.