
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் ஹவுஸ் ஃபுல் - 5 திரைப்படம் உலகளவில் வசூலைக் குவித்து வருகின்றது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் - இயக்குநர் தருண் மன்சூகானி ஆகியோரின் கூட்டணியில் உருவான நகைச்சுவைத் திரைப்படம் ”ஹவுஸ் ஃபுல் - 5”
சஜித் நதியாத்வாலா தயாரித்த இந்தப் படத்தில், நடிகர்கள் அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், சஞ்சய் தத், ஜாக்கி ஷெரோஃப், சோனம் பஜ்வா மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கடந்த ஜூன் 6 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம், அவர்களது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படம் வெளியாகி 10 நாள்களுக்குள் உலகளவில் இப்படம் ரூ. 212.76 கோடி வசூல் செய்து மிகப் பெரியளவில் வெற்றியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2010-ம் ஆண்டு ஹவுஸ் ஃபுல் திரைப்படங்களின் முதல் பாகம் வெளியானது. இதைத் தொடர்ந்து, 2012, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் வரிசையாக வெளியான அடுத்தடுத்த பாகங்களில் இது 5-வது பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: திரில்லர் கதையை எழுதிவரும் பிரேம் குமார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.