16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

குப்பை! மணிரத்னத்தைக் கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஏ. ஆர். ரஹ்மானின் இசையை மணிரத்னம் வீணடித்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து...

Published On :

முத்த மழை பாடலின் விடியோவும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜுன். 5 ஆம் தேதி வெளியானது.

படத்தின் கதை மற்றும் சிம்பு, த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் அளித்த ஏமாற்றம் என பல விஷயங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதால் இப்படம் இந்தியளவில் ரூ. 50 கோடிகூட வசூலிக்காமல் தோல்விப்படமானது.

மேலும், இப்படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் சிவா ஆனந்த் எழுதிய முத்த மழை பாடல் சின்மயி குரலால் பெரும் கவனம் பெற்றது. ஆனால், படத்தில் விடியோ வடிவில் பாடல் பயன்படுத்தப்படவில்லை. இது ரசிகர்களிடம் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

இந்த நிலையில், தமிழில் பாடகி தீ குரலில் த்ரிஷாவுக்கான முத்த மழை பாடலின் விடியோ வடிவத்தை நேற்று (ஜூன் 14) வெளியிட்டிருந்தனர்.

தீ நல்ல பாடகிதான் என்றாலும் த்ரிஷாவின் தோற்றத்தில் அவர் குரல் சரியாகப் பொருந்தவில்லை. மேலும், பாடலை காட்சிப்படுத்திய விதமும் ரசிகர்களுக்கு எரிச்சலைக் கொடுத்ததால் இயக்குநர் மணிரத்னத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

முக்கியமாக, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு நல்ல பாடல்களை இசையமைத்த பின்பும் அதை மணிரத்னம் சரியாக எடுக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.