வெற்றிக்கான ரகசியம் என்ன? சிறகடிக்க ஆசை நாயகியின் பதிவு

வெற்றிக்கான ரகசியம் குறித்து சிறகடிக்க ஆசை தொடரின் நாயகி கோமதி பிரியா கருத்து தெரிவித்துள்ளார்..
கோமதி பிரியா
கோமதி பிரியா இன்ஸ்டாகிராம்
Updated on
1 min read

வெற்றிக்கான ரகசியம் குறித்து சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை கோமதி பிரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடித்துவருவதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை கோமதி பிரியா.

கேரளத்தைச் சேர்ந்த இவர், மலையாளத் தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் செம்பன்னீர் பூவு என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து வருவதால், தமிழ்நாட்டிற்கும் கேரளத்துக்கும் பயணித்துவரும் பிஸியான நடிகையாக உள்ளார்.

கோமதி பிரியா
கோமதி பிரியா இன்ஸ்டாகிராம்

இதனிடையே ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம், அடிக்கடி பயணங்கள் செல்வதையும் கோயிலுக்குச் செல்வதையும் வாடிக்கையாகக் கொண்டவர். சமீபத்தில் கோயிலுக்குச் சென்றுள்ள கோமதி, அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

கோயிலில் கோமதி பிரியா
கோயிலில் கோமதி பிரியாஇன்ஸ்டாகிராம்

இதனுடன் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுப்பதற்காக, சிலநேரங்களில் உங்களுக்குத் தெரியாத பயணத்தில் கடவுள் உங்களை அழைத்துச் செல்வார். அதனால், திட்டங்களை நம்புங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

வெற்றிக்கான ரசிகசியமாக இதனை எடுத்துக்கொள்ளலாம் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | புதிய படங்களில் ஒப்பந்தமாகிவரும் காவ்யா அறிவுமணி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com