விமான நிலையத்திலிருந்து ஒன்றாகச் சென்ற ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா!

நடிகை ரஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் ஒன்றாக காரில் பயணித்தது குறித்து...
Vijay Devarakonda, Rashmika Mandhana in same car
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா. படங்கள்: எக்ஸ்
Published on
Updated on
1 min read

நடிகை ரஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் ஒன்றாக காரில் பயணித்த புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ரஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, டியர் காம்ரெட் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர்.

இருவரும் ஒன்றாக வெளிநாட்டுக்குப் பயணம் செய்வது என இருந்தாலும் இதுவரை யாரும் இது குறித்து அதிகாரபூர்வமாக ஆம் எனவும் மறுப்பு எனவும் கருத்துக் கூறியதில்லை.

அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய், ரன்பீர் கப்பூர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் ராஷ்மிகா நடித்து பிரபலமானார்.

கடந்தாண்டு புஷ்பா 2 புரமோஷன் நிகழ்ச்சியில் ராஷ்மிகா, “என் காதல் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே... இந்தப் பதிலுக்காகத்தான் கேட்டீர்கள் எனத் தெரியும்” என்றார்.

இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் இருவரும் ஒன்றாக காரில் புறப்பட்டுச் சென்றார்கள். இருவருமே மாஸ்க் அணிந்து இருந்தார்கள். இருப்பினும் இருவருது முகவும் தெளிவாகத் தெரிகின்றன.

விரைவில், திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com