மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

விஜய் பிறந்தநாளில் புதிய அப்டேட்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் அப்டேட் குறித்து...

News image

ஜன நாயகன் போஸ்டர். - படம்: எக்ஸ் / கேவிஎன் புரடக்‌ஷன்ஸ்.

Updated On :20 ஜூன் 2025, 12:41 pm

நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் புதிய அப்டேட்டை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை எச். வினோத் இயக்குகிறார்.

ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் பேசும் படமாகவும் இது உருவாகி வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026-இல் ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

விஜய் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுவே அவரின் கடைசி படமென்பதால் ரசிகர்களுக்கு இத்தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன். 22 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் விஜய்யின் படப்பிடிப்பு முடிவடையவில்லை. அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் என்பதால் படக்குழு நிதானமாகச் செயல்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.