நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சமூகப் பிரச்சினையைப் பேசும் ஆக்ஷன் படமாக இந்த ஜன நாயகன் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பொங்கல் வெளியீடாக இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ ஜூன் 22 ஆம் தேதி இரவு 12 மணியளவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, படத்தின் அதிகாரப்பூர்வ கிளிம்ப்ஸ் விடியோவை கேபிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
‘என் நெஞ்சில் குடியிருக்கும்..’ என விஜய்யின் குரலில் தொடங்கும் இந்த கிளிம்ப்ஸ் விடியோவில் போராட்டக்களம் போன்ற பகுதியில் கையில் வாளுடன் போலீஸ் உடையில் நடந்து வருகிறார் விஜய். முறுக்கு மீசை கெட் அப்பில் ‘மெர்சல்’ படத்தை நினைவுப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோவை விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், இந்த விடியோ தொடங்கும்போது ‘உண்மையான தலைவர் மக்களுக்காக மட்டுமே எழுகிறார். அதிகாரத்துக்காக அல்ல’ எனவும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளியானது தாக்கோல் விடியோ பாடல்!

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 111-வது படம்! அறிமுக பாடல் வெளியீடு!

காவல்கார கருப்பு மேக்கிங் விடியோ!

ஜன நாயகனின் உண்மையைப் பேச தைரியம் இல்லை: இயக்குநர் வினோத்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



