அய்யனார் துணை நடிகருக்கு ஆண் குழந்தை!

அய்யனார் துணை நடிகர் ஜெபின் ஜானுக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.
அய்யனார் துணை தொடரிலிருந்து...
அய்யனார் துணை தொடரிலிருந்து...இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

அய்யனார் துணை நடிகர் ஜெபின் ஜானுக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடரில் எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடித்து வருகிறார். இவரின் சகோதரன் பாத்திரத்தில் நடிகர் ஜெபின் ஜான் நடித்து வருகிறார்.

இவர் இதற்கு முன்னர் என் இதயம், வித்யா நம்பர் 1, செல்லம்மா உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.

ஜெபின் ஜான் - மீனு
ஜெபின் ஜான் - மீனு

தற்போது, அய்யனார் துணை தொடரில் இவர் நடித்துவரும் பாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவரின் அழுத்தமான நடிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, நடிகர் ஜெபின் ஜான் அவரது நீண்ட நாள் காதலி மீனுவை கடந்த 2023 ஆம் ஆண்டு உற்றார் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜெபின் ஜான் - மீனு தம்பதியினருக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளதை அவர்கள் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிவித்துள்ளனர்.

இவர்களுக்கு ரசிகர்கள், சின்ன திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Summary

Ayyanar thunai serial actor Jebin John has given birth to a baby boy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com