பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

போதைப் பொருள் வழக்கு: நடிகா் கிருஷ்ணா உள்பட 2 போ் கைது

நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...

News image

நடிகர் கிருஷ்ணா - படம்: X/GopuramCinemas

Updated On :26 ஜூன் 2025, 7:58 am

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவையும் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி பிரசாத், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த பிரதீப்குமாா் ஆகியோா் மூலமாக கொகைன் போதைப் பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது.

மேலும், இந்தக் கும்பலுக்கும் கழுகு திரைப்பட நடிகா் கிருஷ்ணாவுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீஸாா் திட்டமிட்டிருந்தனா். ஆனால், அவா் கேரளத்தில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராமல் இருந்தாா். மேலும், அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தனிப்படையினா் கிருஷ்ணாவை தேடி கேரளத்துக்கு சென்றனா். இந்நிலையில், அவா் தனது வழக்குரைஞருடன் நுங்கம்பாக்கம் போலீஸாா் முன் புதன்கிழமை நண்பகல் ஆஜரானாா். போலீஸாா் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விடியவிடிய விசாரணை நடத்தினர்.

தனக்கு போதைப் பொருள் பழக்கம் கிடையாது என்றும் இதய நோயாலும், இரைப்பை பிரச்னையாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக கிருஷ்ணா வாக்குமூலம் அளித்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையிலும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரின் வீட்டில் இன்று காலை முதல் போலீசார் சோதனை நடத்தினர். மேலும், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கைதானவர்களுடன் கிருஷ்ணாவில் செல்போன் உரையாடலை ஆய்வு செய்யத் தொடங்கினர்.

இதில், கிருஷ்ணாவும் கைதானவர்களும் மறைமுக வார்த்தைகளால் (கோட் வேர்டு) பேசிக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவையும் சென்னை போலீசார் கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Summary

Chennai police have also arrested actor Krishna in a drug case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.