
மலையாள திரையுலகின் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பிரபலங்கள், மத்திய தணிக்கை வாரியத்தின் அலுவலகம் முன்பு வரும் ஜூன் 30 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும், மக்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபியின் நடிப்பில் உருவாகியுள்ள ஜே.எஸ்.கே. (ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா) எனும் திரைப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்துக்கு ஜானகி எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஜானகி என்பது சீதா தேவியின் மற்றொரு பெயர் என்பதால், அந்தப் பெயரை மாற்றும்படி மத்திய தணிக்கை வாரியம், அந்தப் படத்தின் தயாரிப்பளர்களுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.
இதனை எதிர்த்து, மலையாள திரையுலகைச் சேர்ந்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், கேரளத்தின் திருவனந்தபுரத்திலுள்ள மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின், அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, கேரள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது.
இத்துடன், அந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தாமதமாக்கப்படுவதை எதிர்த்து ஜே.எஸ்.கே. படக்குழு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தணிக்கை வாரியம் அதன் முடிவை இன்றே (ஜூன் 27) தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தணிக்கை வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட ஜே.எஸ்.கே. திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக திரையரங்குகளில் ஒளிப்பரப்பாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று, எம்.பி. பத்மகுமார் இயக்கத்தில் உருவான “டோக்கன் நம்பர்” என்ற திரைப்படத்தில் வரும் ஜானகி எனும் கதாபாத்திரத்தின் பெயரானது, ஜெயந்தி என மாற்றப்பட்ட பின்னரே அந்தப் படத்தை வெளியிட அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
The censor certificate be denied if it is named 'Janaki'. The Malayalam film industry is protesting.
இதையும் படிக்க: ஓடிடியில் மாமன் எப்போது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.