இதயம் தொடரிலிருந்து விலகியது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு ஃபரினா பதில்!

இதயம் - 2 தொடரில் இருந்து விலகியது ஏன் என ஃபரினா கூறியதாவது...
Farina Azad from the series Idyam.
இதயம் தொடரிலிருந்து ஃபரினா ஆசாத். படம்: யூடியூப் / ஜீ5.
Published on
Updated on
1 min read

இதயம் சீசன் 2 தொடரில் இருந்து விலகியது குறித்து நடிகை ஃபரினா ஆசாத் விளக்கம் அளித்துள்ளார். அதில் தனிப்பட்ட காரணத்தினால் விலகியதாகக் கூறியுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2023 முதல் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியலின் முதல்பாகம் கடந்த மார்ச்சில் நிறைவடைந்தது.

640 எபிசோடுகள் சென்ற இந்தத் தொடரில் மித்ரா கதாபாத்திரத்தில் நடிகை ஃபரினா ஆசாத் நடித்திருந்தார்.

தற்போது, இதன் இரண்டாவது பாகத்தில் புதிய நடிகர், நடிகைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில், மித்ரா கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடித்து வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இது குறித்து ரசிகர்கள் அன்பு மழையாகக் கேள்வி கேட்டதால் நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

அதில் ஒரு ரசிகர், “அக்கா நான் உங்களுக்காகத்தான் இதயம் சீரியலைப் பார்த்து வந்தேன்” எனக் கூறினார். மற்றொருவர், “நீங்கல் இல்லாமால் சீரியல் பார்க்கவே பிடிக்கவில்லை” எனக் கூறினார்.

Text messages from fans.
ரசிகர்களின் குறுஞ்செய்திகள். படம்: இன்ஸ்டா / ஃபரினா ஆசாத்.

இந்தக் குறுஞ்செய்தி, பதிவுகளுக்கு ஃபரினா ஆசாத், “உங்கள் அன்புக்கு நன்றி. எனது தனிப்பட்ட காரணங்களால் சீரியலில் இருந்து விலகினேன். அடுத்த சீரியலில் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.

Summary

Actress Farina Azad has explained why she left the series Idayam Season 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com