பான் இந்திய நடிகர்கள் நடித்த கண்ணப்பா படம் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது.
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளிலும் ’பான்-இந்தியா’ திரைப்படமாக எடுக்கப்பட்டது.
சிவ பக்தரின் கதையாக உருவான படமென்பதால் இதன் வணிக நோக்கிறாக இந்தியளவில் பிரபலமான நடிகர்கள் பிரபாஸ், மோகன் லால், அக்ஷய் குமார், சரத் குமார், காஜல் அகர்வால் இளம் நாயகி ப்ரீத்தி முந்தன், நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம், மோகன் பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
ஆனால், படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. இதனால், ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தக் லைஃப் ஓடிடி தேதி இதுவா?
இதுவரை இப்படம் ரூ. 18 கோடிதான் வசூலித்துள்ளதாம். தெலுங்கில் மட்டும் சில திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓட, இந்தியளவில் பல திரைகளிலிருந்தும் படத்தை நீக்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
kannappa movie gets disaster results
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆதாா் விநியோகிக்க கடுமையான கட்டுப்பாடுகள் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

ஒரே காட்சியில் பான் இந்திய சூப்பர் ஸ்டார்கள்!

தமிழகத்தில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும் : கே. பாலகிருஷ்ணன் பேட்டி

தென்மாவட்டங்களில் அதிமுக படுதோல்வியைச் சந்திக்கும்: ஓ. பன்னீா்செல்வம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

