நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4, பென்ஸ், கால பைரவா என அடுத்தடுத்து 3 படங்களில் நடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர், இயக்குநர், நடனக் கலைஞர் என பல முகங்கள் கொண்டவர் ராகவா லாரன்ஸ். தனது அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறார்.
இவர் நடித்து இயக்கிய முனி, காஞ்சனா படங்களுக்கென தனியே ரசிகர் பட்டாளம் உண்டு.
முனி திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக முனி - 2 எனும் காஞ்சனா திரைப்படத்தை 2011 ஆம் ஆண்டு லாரன்ஸ் இயக்கி நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலைக் குவித்தது.
தொடர்ந்து, காஞ்சனா - 2 படத்தை எடுத்தார். அதுவும் வணிக வெற்றியை அடைந்தது. பின், 2019-ல் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கினார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற அந்தப் படமும் வெற்றிப் படமானது.
இதையும் படிக்க | முத்தத்தினால் வரும் பிரச்னை..!கிஸ் கிஸ் கிஸ்ஸிக் டிரைலர்!
இதனைத் தொடர்ந்து லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா - 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, நோரா ஃபதேஹி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஆகஸ்ட் வெளியீடாக காஞ்சனா 4 திரைக்கு வரவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்தும் லாரன்ஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ’பென்ஸ்’ படத்தில் லாரன்ஸ் நடிக்கவுள்ளார். எல்சியூ திரைப்படமாக உருவாகும் இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இத்துடன், தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படமான ‘ காலபைரவா’ படத்தில் லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது. காலபைரவா திரைப்படமும் அடுத்தாண்டு வெளியீடாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா!
ராகவா லாரன்ஸ் நடிக்கும் இந்த 3 படங்களும் அதிக பொருட்செலவில் உருவாகவுள்ளதாகவும் பான் இந்தியா அளவில் வெளியிடப்படும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஜித் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்த ராகவா லாரன்ஸ்!

தமிழில் வெற்றி பெறாத கிருத்தி ஷெட்டி!

தெலுங்கு மறுவெளியீட்டில் அசத்தும் காஞ்சனா!

8 திரைப்படங்களில் விஜய் சேதுபதி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


