
தெலுங்கு நடிகர் சுஷாந்த் நடிப்பில் உருவான கிஸ் கிஸ் கிஸ்ஸிக் பட டிரைலர் வெளியாகியுள்ளது.
விதி ஆச்சார்யா தயாரிப்பில் சிவ் ஹரே இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் கிஸ் கிஸ் கிஸ்ஸிக். புஷ்பா 2 பாடல் வரிகளில் இருந்து இந்தப் படத்தின் தலைப்பை வைத்துள்ளார்கள்.
நாயகன் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்தால் அந்தப் பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் திருமணம் ஆகிவிடும். அதனால் நாயகன் சந்திக்கும் பிரச்னைகளை நகைச்சுவை கலந்து படமாக்கியுள்ளார்கள்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை வழங்குகிறது. இந்தப் படத்தில் ஜான்யா ஜோஷி, விதி நடித்துள்ளார்கள்.
நிதின் நிட்ஸ் அரோரா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் வரும் மார்ச்.21ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.