
சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி மற்றும் பராசக்தி படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் இந்தாண்டே திரைக்கு வரவுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்து அவர் யாருடைய படத்தில் நடிக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. கோட் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடித்ததால் அவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பார் எனக் கூறப்பட்ட நிலையில், அவரது அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பது உறுதியாகியுள்ளது.
மலையாளத்தில் 2018 படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, பராசக்தி படத்தில் நடிகர் ரவி மோகன் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்றும், இது சிவகார்த்திகேயனின் திரைப் பயணத்தில் அதிக பொருட்செலவில் உண்டாகும் படமாக இருக்குமென்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.