ஜெயிலர் - 2 படப்பிடிப்பு தொடங்கியது! அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு தொடர்பாக....
ஜெயிலர் - 2 படப்பிடிப்பு தொடங்கியது! அதிகாரபூர்வ அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று(மார்ச் 10) தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். இதனிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைந்தார். முன்னதாக, ஜெயிலர் - 2 படத்தின் அறிவிப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

அதில், ரஜினியின் ஆக்‌ஷன் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தன.

சென்னையில் ஜெயிலர் - 2 படப்பிடிப்புக்காக செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று(மார்ச் 10) படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் 15 நாள்கள் படமாக்கப்படவுள்ளது. இதன் பின்னர் மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

ஜெயிலர்-2 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com