ரோஜா 2 தொடர்
ரோஜா 2 தொடர் இன்ஸ்டாகிராம்

விரைவில் முடிகிறது ரோஜா -2 தொடர்!

ரோஜா 2 தொடர் முடியவுள்ள தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on

மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ரோஜா 2 தொடர் விரைவில் முடியவுள்ளது. தொடர் முடியவுள்ள தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஜா முதல் பாகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில், இரண்டாம் பாகம் நேரடியாக யூடியூப் தளத்திலேயே ஒளிபரப்பாகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ரோஜா -2 ஒளிபரப்பாகிவருகிறது.

தனது வசீகரமான தோற்றத்தாலும் நடிப்பாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்த பிரியங்கா நல்காரியே ரோஜா -2 தொடரிலும் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நியாஸ்கான் நடித்து வருகிறார். இவர் மூன்று முடிச்சு தொடரிலும் நாயகனாக நடித்து வருகிறார்.

இத்தொடர் சரிகம யூடியூப் சேனலில் ஜன. 6 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது.

சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த சுந்தரி தொடரில் கார்த்திக் பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த ஜிஷ்ணு மேனனும் ரோஜா -2 தொடரில் நடித்து வருகிறார்.

இளமை துள்ளலுடன் காதல், பாசம் என பல உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இத்தொடர் விரைவில் முடியவுள்ளது. யூடியூப் தளத்தில் ஒளிபரப்பானதால் மிகவும் குறுகிய காலத்தில் ரோஜா -2 தொடர் முடியவுள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | பாக்கியலட்சுமி, அய்யனார் துணை தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com