அம்பானி வீட்டுத் திருமணத்தில் பல லட்சம் மதிப்புள்ள வைரத்தைத் தொலைத்த நடிகை!

அம்பானி வீட்டு திருமணத்தில் பல லட்சம் மதிப்புள்ள வைரத்தைத் தொலைத்த நடிகை!
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்
Published on
Updated on
1 min read

நாட்டின் மிகப் பணக்கார தொழிலதிபர்களில் முன்னணியில் இருக்கும் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட மாட்டார்கள்.

அவ்வளவு ஆடம்பரமாக பல நாள்கள், உலக நாடுகளிலிருந்தும் விருந்தினர்கள் என நடைபெற்ற இந்த திருமணத்தில், தொலைக்காட்சி பிரபலமான கிம் கர்தாஷியன், தனது விலை உயர்ந்த தங்க, வைர நெக்லஸிலிருந்து வைரக் கல்லை தவறவிட்டுவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு ஏராளமான விருந்தினர்கள் வந்திருந்த நிலையில், கிம் கர்தாஷியன் தனது சகோதரியுடன் மிக விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து பங்கேற்றனர்.

அப்போது, கிம் கர்தாஷியன் அணிந்திருந்த தங்கத்தால் ஆன, வைரம் மற்றும் முத்துகள் பதிக்கப்பட்ட நெக்லஸில் இருந்து ஒரு பெரிய முட்டை வடிவிலான வைரக் கல் கீழே விழுந்து காணாமல் போயிருக்கிறது.

இதனை, கிம் கர்தாஷியனுடன் இருந்த அவரது சகோதரிதான் கண்டுபிடித்து அவருக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால், தாங்கள் இருந்த பகுதிகளில் எல்லா இடத்திலும் சகோதர்கள் இருவரும் வைரக் கல்லை தேடியபோதும் அது கிடைக்கவில்லையாம்.

தரைப்பகுதியில், நாங்கள் எங்கெல்லாம் சென்று வந்தோமோ அங்கெல்லாம் தேடினோம். எங்களது ஆடைகளில் விழுந்திருக்கிறதா என்றும் பார்த்தோம். ஆனால் அது எங்குமே இல்லை. அவர்களுடன் சேர்ந்த பாதுகாவலர்களும் சில விருந்தினர்களும் கூடி வைரக் கல்லை தேடியிருக்கிறார்கள்.

ஆனால், கடைசியில் அது கிடைக்கவேயில்லை. இதனால் கிம் கர்தாஷியன் மிகவும் வருத்தமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பும், கிம் கர்தாஷியன் வைரக் கம்மலை தொலைத்திருப்பதாகவும் தற்போது நெக்லஸில் வைரக் கல் தொலைந்திருப்பதாகவும் அவரைப் பற்றி கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com