
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரில் இருந்து நடிகை ஜனனி விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இதயம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
காதல், மகளின் மீதான பெற்றோரின் பாசம், குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வரும் இத்தொடர், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில், அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெறும் தொடராக இதயம் உள்ளது. இத்தொடரில் ஜனனி அசோக் குமார் நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நடிகர் ரிச்சர்ட் ஜோஷ் நடிக்கிறார்.
ஆகஸ்ட் 2023ல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர் 650 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிவருகிறது. இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், இதன் இரண்டாம் பாகமும் எடுக்கப்படவுள்ளது.
இதனிடையே இதயம் தொடரில் இருந்து விலகுவதாக நடிகை ஜனனி அசோக் குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளதாவது,
''இது, இதயம் தொடரில் பாரதி பாத்திரத்துக்கான பிரியாவிடை. என் இதயம் அன்பாலும் நன்றியாலும் வார்த்தையால் கூற முடியாத உணர்வுகளாலும் நிறைந்திருக்கிறது. பாரதி என்ற பாத்திரத்தில் நடித்தது மிகவும் பெருமை மிகுந்த தருணம். என்னை பாரதியாக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் மிகுந்த நன்றி.
ஓய்வற்ற உழைப்பு, புதுமை மற்றும் வேலையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட படக்குழுவுடனும் சக நடிகர்களுடனும் இப்பயணத்தில் இருந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.
அற்புதமான ரசிகர்களே, உங்கள் அன்பும் ஆதரவும் இந்த உலகில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. உங்கள் உற்சாகம், ஊக்குவிப்பு போன்றவை என்னை தொடர்ந்து பயணிக்கவைக்கிறது. இத்தொடரின் மூலம் உங்களை மகிழ்வித்ததிலும் உங்களில் ஒருத்தியாக வாழ்ந்ததிலும் மகிழ்கிறேன்.
இந்த அத்தியாயத்தை இத்துடன் முடிக்கிறேன். அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களுக்காக காத்திருக்கிறேன். இந்த அற்புதமான பயணத்தில் உடன் இருந்தவர்களுக்கு மிகுந்த நன்றி. அடுத்த திரையில் உங்களை சந்திக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்தப் பதிவால், சின்ன திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு நடிக்கச் சென்றுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | வெற்றிமாறன் பட வாய்ப்பை மறுத்த சீரியல் நடிகை கோமதி பிரியா!
இதையும் படிக்க | சிறகடிக்க ஆசை மீனா குறித்து வருத்தம் தெரிவித்த எதிர்நீச்சல் இயக்குநர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.