ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

வீர தீர சூரன் டிக்கெட் முன்பதிவு மந்தம்!

வீர தீர சூரன் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்து...

Published On :

வீர தீர சூரன் திரைப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மந்தமாகவே உள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் நாளை (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமான இது ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. இதனால், நீண்ட காலத்திற்குப் பின் மீண்டும் தூள் விக்ரமை பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

ஆனால், இப்படத்தின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் சென்னையில் ஒரு திரையரங்கம்கூட இன்னும் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை. பெரும்பான்மையான திரைகளில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாகவே உள்ளன. இது விக்ரம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறுதியாக, விக்ரம் நடித்திருந்த தங்கலான் வெற்றி பெற்றாலும் பொது ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதன் தாக்கத்தால் வீர தீர சூரன் படத்தின் விமர்சனங்களைப் பார்த்த பின் படத்திற்குச் செல்லலாம் என ரசிகர்கள் நினைக்கிறார்களோ என்னவோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.