டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

திருப்பதி செல்ல திட்டமா? டிசம்பர் மாத ஆன்லைன் முன்பதிவு தேதிகள் அறிவிப்பு!

டிசம்பர் மாதம் திருப்பதி செல்வோர் கவனத்துக்கு..

Tirupati temple

திருப்பதி - file photo

Published On :

டிசம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்வோரின் கவனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு அட்டவணை பற்றிய தகவல்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, திருப்பதி ஏழுமலையான் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் 2026 டிசம்பர் மாத ஒதுக்கீடு செப். 19-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு புக்கிங் தொடங்குகிறது.

அதேபோன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்காரம் டிக்கெட் செப்.22-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு புக்கிங் தொடங்குகிறது.

செப். 23-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு அங்கப்பிரதட்சிணம் டோக்கன் பக்தர்கள் புக் செய்துகொள்ளலாம்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆன்லைன் புக்கிங் செப். 23-ஆம் தேதி மதியம் 3.00 மணிக்கு தொடங்குகிறது.

டிசம்பர் மாதத்தில் ரூ. 300 தரிசன கட்டணத்துடன் சுவாமி தரிசனம் செய்வோர் செப். 24-ஆம் தேதி காலை 10.00 மணிக்கும், அன்றைய தினம் அறை ஒதுக்கீடு மாலை 3 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், செப். 25-ஆம் 10.00-க்கு திருமலையில் உள்ள இதர கோயில்களின் சேவைகளும், சீனிவாச திவ்ய அனுக்கிரக விஷேச ஹோமம் உள்ளிட்ட சேவைகளின் ஆன்லைன் புக்கிங் தொடங்குகிறது.

மேற்கண்ட டிக்கெட்டுகள் மற்றும் வாடகை அறைகள் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள https://ttdevasthanams.ap.gov.in/home/dashboard என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.