நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இந்தியாவில் 2% மக்கள் மட்டுமே திரையரங்குகளில் படம் பார்க்கிறார்கள்: ஆமீர் கான்

இந்தியாவில் கூடுதல் திரைகள் வேண்டுமென நடிகர் ஆமிர் கான் பேசியுள்ளார்.

News image

ஆமிர் கான்

PTI

Updated On :2 மே 2025, 11:30 am

DIN

இந்தியாவில் நடைபெறும் வேவ்ஸ் சந்திப்பில் நடிகர் ஆமிர் கான் திரையரங்குகளில் அதிகமாக முதலீட்டை அளிக்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.

60 வயதாகும் ஆமிர் கான் சினிமாவில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கிறார். சமீபத்தில் தனது புதிய காதலியை அறிமுகப்படுத்தினார்.

முதல்முறையாக உலக ஆடியோ விடியோ என்டர்டெயின்மென்ட் சந்திப்பு (வேவ்ஸ்) மும்பையில் நேற்று தொடங்கியது. இதை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் பங்கேற்று பேசினார். ஆமிர்கான் பேசியதாவது:

திரையரங்குகளில் முதலீடு தேவை

இந்தியாவில் வித்தியாசமான பல திரையரங்குகள் வேண்டும் என நம்புகிறேன். இந்தியாவின் சில மாவட்டங்களில் மிகப்பெரிய இடங்களில் ஒரு திரையரங்கம்கூட இல்லாமல் இருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் பிரச்னைகளை சந்தித்தோமோ அதெல்லாம் கூடுதல் திரைகளுக்காக மட்டுமே. என்னைப் பொறுத்தவரை நாம் அதில்தான் முதலீட்டைச் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் அதிகமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் அதிகமான திரைகள் இருக்கும்போதே அது உணரப்படும்.

திரையரங்கம் இல்லையென்றால் மக்களும் படத்தினை பாரக்க மாட்டார்கள்.

குறைவான திரைகள் கொண்ட இந்தியா

இந்தியாவின் மக்கள் தொகையைக் கணக்கிடும்போது மிகவும் குறைவான திரையரங்குகளே இருக்கின்றன.

இந்தியா முழுவதும் வெறும் 10,000 திரைகளை இருக்கின்றன. ஆனால், இந்தியாவை விட 3இல் 1 பங்கு மக்கள் தொகையுள்ள அமெரிக்காவில் 40,000 திரைகள் இருக்கின்றன. அவர்கள் நம்மைவிட முன்பாக இருக்கிறார்கள்.

சீனாவில் 90,000 திரைகள் இருக்கின்றன. இந்தியாவில் தற்போது இருக்கும் 10,000 திரைகளிலும் பாதி தென்னிந்தியாவில் இருக்கின்றன. ஹிந்தி படங்களுக்கென்று 5,000 திரைகள் மட்டுமே இருக்கின்றன.

இந்தியாவில் 2% மக்கள் மட்டுமே திரையரங்குகளில் படம் பார்க்கிறார்கள்

எவ்வளவு பெரிய பிளாக்பஸ்டர் படமானாலும் இந்தியாவில் குறைந்த அளவு மக்களே படம் பார்க்கிறார்கள்.

திரைப்படங்களை விரும்பி பார்க்கும் இந்திய இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பேர் மட்டுமே படங்களை திரையரங்குகளில் பார்க்கிறார்கள்.

மீதமுள்ள 98 சதவிகித மக்கள் எப்படி படம் பார்ப்பது? கொன்கன் போன்ற இடங்களில் திரையரங்குகளே இல்லையெனில் எப்படி பார்ப்பார்கள்? அது மிகவும் மோசமான சூழ்நிலை. அதனால், திரைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.