
மே. 1 ஆம் தேதி திரைக்கு வந்த முக்கியமான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன.
நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, நானியின் ஹிட் - 3, அஜய் தேவ்கன் நடித்த ரெய்டு - 2 ஆகிய திரைப்படங்கள் மே. 1 ஆம் தேதி வெளியாகின.
இதில், ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ. 110 கோடிக்கு அதிகமாகவும் நானியின் ஹிட் - 3 ரூ. 120 கோடி வரையிலும் வசூலித்துள்ளன.
பாலிவுட்டில் எதிர்பார்க்கப்பட்ட ரெய்டு - 2 திரைப்படமும் ரூ. 90 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமாகியுள்ளது.
இப்படங்களை விட கதை ரீதியாகவும் வரவேற்பு ரீதியாகவும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ரூ. 8 கோடியில் உருவான இப்படம் இதுவரை ரூ. 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த வாரமும் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
அதிசயமாக, ஒரே நாளில் வெளியான அனைத்து படங்களும் ஹிட் அடித்திருப்பது திரைத்துறையைச் சேர்ந்தவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.