/

தாதாசாகேப் பால்கேவாக நடிக்கும் ஜூனியர் என்டிஆர்!

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தொடர் குறித்து...

News image
Updated On :15 மே 2025, 11:32 am IST

நடிகர் ஜூனியர் என்டிஆர் இந்திய திரைப்படத் துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கேவின் பயோபிக் தொடரில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் தனக்கென பெரிய மார்க்கெட்டை வைத்திருக்கிறார். தொடர்ந்து இவர் நடித்த தேவரா படம் அதிகமான வசூலைச் செய்தது.

தற்போது, பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தண்டு திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் ராஜமௌலி மகன் கார்த்திகேயா தயாரிப்பில் மேட் இன் இந்தியா (made in india) என்கிற இணையத் தொடர் உருவாக உள்ளதாகவும் இது இந்திய திரைப்படத் துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யும் தொடர் என்றும் கூறப்படுகிறது.

இதில், தாதாசாகேப் பால்கே கதாபாத்திரத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தொடரின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.