நடிகர் சிரஞ்சீவியின் 157-ஆவது படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவிக்கு சமீபத்தில் பெரிதாக வெற்றிப் படங்கள் அமையவில்லை.
இவர் நடித்த வால்டர் வீரய்யா வசூலில் கலக்கியது. ஆனால், அதற்கடுத்து வெளியான போலோ ஷங்கர் திரைப்படம் தோல்விப்படமானது.
அடுத்ததாக, இவர் நடித்துவரும் விஸ்வாம்பரா திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. யுவி கிரியேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை வஷிஷ்டா இயக்கியுள்ளார்.
இந்நிலையில், சிரஞ்சீவி தனது 157-ஆவது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தினை அனில் ரவிபுடி இயக்குகிறார்.
இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதை படக்குழு விடியோவாக வெளியிட்டுள்ளது.
இந்தப் படம் அடுத்தாண்டு சங்கராத்திக்கு (பொங்கல் விழா) வெளியாகுமென நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் வெளியான எஃப் 2, எஃப் 3, பகவந்த் கேசரி என்ற கமர்ஷியல் வெற்றிப் படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அனில் ரவிபுடி.
சமீபத்தில் வெளியான இவரது சங்கராந்திக்கு வஸ்துனாம் திரைப்படம் ரூ.230 கோடியை தாண்டி வசூலித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றிப் பாதைக்குத் திரும்புவாரா ஷேன் நிகம்?

சிவகார்த்திகேயன் படத்தில் திலீப்?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாட்ஷா பட இயக்குநரின் சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

