தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சன் டிவியில் மதிய நேரத் தொடர் செய்த சாதனை!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மதிய நேரத் தொடர் 800 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகிவருகிறது.

News image

நந்தன் - சாம்பவி - இன்ஸ்டாகிராம்

Updated On :19 மே 2025, 4:06 pm IST

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மதிய நேரத் தொடர் 800 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகிவருகிறது.

சாம்பவி குருமூர்த்தி மற்றும் நந்தன் லோகநாதன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இலக்கியா தொடர், 800 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

மக்களைத் தக்கவைக்கும் வகையிலான கதையம்சமும், ரசிகர்களைக் கவரும் வகையிலான நடிகர்களின் நடிப்பும் இலக்கியா தொடருக்கான ரசிகர்களைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்துவருகிறது.

இலக்கியா தொடர்

இலக்கியா தொடர் - இன்ஸ்டாகிராம்

முதன்மை நடிகர்களுடன் சுஷ்மா நாயர், காயத்ரி சேஷாத்ரி, ராஜேஸ்வரி, பரத் கல்யாண், ஆகியோரும் இத்தொடரின் வெற்றிக்கு காரணமான முக்கியமான பாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர்.

எதிர்பாராதவிதமாக இலக்கியாவுக்கு நடக்கும் திருமணமானது கெளதம் என்ற இளைஞரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைத்து, குடும்ப வாழ்க்கையிலும், சொந்தத் தொழிலும் மேம்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து இலக்கியா தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இலக்கியாவை வெறுப்பவராக இருந்தாலும், படிப்படியாக இலக்கியாவின் பொறுமை, அன்பு, சுயநலமின்மை போன்றவற்றை கெளதம் உணரத் தொடங்கி, இலக்கியாவுக்கு மனைவியாக அங்கீகாரம் கொடுத்து, வாழ்கையை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்துகிறார் கெளதம்.

தற்போது இந்தத் தொடர் 800 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதனால், குழுவினர் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர், 800 நாள்களாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தொடர்வது மிகவும் அரிதானது. ஆனால், இலக்கியா தொடர் இதனை முறியடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்த தொடராக உள்ளது.

பாரதி தம்பி திரைக்கதையில் பழனிசாமி வசனம் எழுத, நட்ராஜ் இத்தொடரை இயக்குகிறார். திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.