தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

அமலாக்கத்துறை வளையத்திற்குள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்?

பிரபல நடிகர்களின் இல்லத்தில் சோதனை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்திருப்பதாகத் தகவல்...

Updated On :

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்பான வழக்கில் அவர் தயாரிக்கும் பட கதாநாயகர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாம்.

டான் பிக்சர்ஸ் நிறுவனரான ஆகாஷ் பாஸ்கரன் இட்லி கடை, பராசக்தி, சிம்பு - 49, இதயம் முரளி உள்ளிட்ட படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார். ஒவ்வொரு படமாகத் தயாரித்து லாபம் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த படத்தைத் தயாரிப்பதுதான் வழக்கமானது.

ஆனால், வரும்போதே பிரம்மாண்டமாக அடுத்தடுத்து நட்சத்திர நடிகர்களை ஒப்பந்தம் செய்து தமிழ் சினிமாவில் சலசலப்பை ஏற்படுத்தியவர் ஆகாஷ் பாஸ்கரன்.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறையினர் முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும் அதில் நடிகர் தனுஷுக்கு இட்லி கடை படத்தை இயக்கி, நடிக்க ரூ. 40 கோடியும், சிவகார்த்திகேயனுக்கு முன்பணமாக ரூ. 25 கோடியையும் சிம்புவுக்கு முன்தொகையாக ரூ. 15 கோடியும் ஆகாஷ் கொடுத்ததாக் கூறப்படுகிறது.

மேலும், சட்டவிரோத பணமாற்றம் மற்றும் முதலீடு செய்திருக்கலாம் என அமலாக்கத்துறையினர் சந்தேகப்பட்டதால் ஆகாஷ் பாஸ்கரனை விசாரிக்க சம்மன் அனுப்பினர். இன்று ஆஜராக வேண்டிய ஆகாஷ் இன்னும் ஆஜராகவில்லை. இதனால், அவர் எங்கிருக்கிறார் என்கிற விசாரணையைத் துவங்கியுள்ளனராம்.

இதற்கிடையே, நடிகர்கள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.