கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு குழுவாகச் சென்ற அய்யனார் துணை நடிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் இறுதி நிகழ்ச்சிக்கு அய்யனார் துணை நடிகர்கள் குழுவாகச் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அய்யனார் துணை நடிகர்கள் - இன்ஸ்டாகிராம்

Published On :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் இறுதி நிகழ்ச்சிக்கு அய்யனார் துணை நடிகர்கள் குழுவாகச் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நடிகை மதுமிதா பகிர்ந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் சினிமாவில் பின்னணிப் பாடகர்களாகியுள்ளனர்.

இதனிடையே, சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 10வது நிகழ்ச்சியின் பிரமாண்ட இறுதிப்போட்டி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த சீசனின் வெற்றியாளராக காயத்ரி அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசை நஸ்ரின் வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 3-வது இடத்தை வென்ற சாரா சுருதி மற்றும் ஆத்யா ஆகிய இருவருக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

இதில், பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், அய்யனார் துணை தொடரின் நடிகர்கள் குழுவாகக் கலந்துகொண்டு பாடல்களைக் கேட்டு ரசித்தனர். மேலும், அரங்கத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டு, ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்....

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்.... - இன்ஸ்டாகிராம்

ஒரு தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்லாது, வெளியே பொதுவான இடங்களுக்கும் குழுவாகச் செல்வது, அவர்களிடையேவுள்ள நட்பின் ஆழத்தைக் காட்டுவதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.