பிரபல நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் அணைக்காட்டை பூர்வீகமாக கொண்ட வில்லியம் - வில்லி கிரேஸ் தம்பதியர் மன்னார்குடியில் வாழ்ந்த போது 1949 டிசம்பர் 20 ஆம் தேதி பிறந்தவர் ராஜேஷ்.
தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்தவர். இவர் நடிப்பில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும் பல சின்னத்திரை தொடர்களும் வெளியாகியிருக்கின்றன.
அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர், ’கன்னிப் பருவத்திலே’ படம் மூலம் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். நடிகர் விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிப்பைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்டவரான இவர், அத்துறையிலும் கவனம் பெற்றவராகவே இருந்தார்.
இதையும் படிக்க: இறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறை கட்டிய ராஜேஷ்!
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜேஷ் இன்று காலை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.
75-வயதான ராஜேஷ் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நடிகர் ராஜேஷ் - குணங்களும் குணச்சித்திரங்களும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.