வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஓடிடியில் வெளியானது துடரும்!

துடரும் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியிருப்பது பற்றி...

News image
Updated On :30 மே 2025, 5:34 am

DIN

நடிகர் மோகன்லால் நடித்த துடரும் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்கு வந்தது.

குடும்பப் பின்னணியில் எமோஷனல் கதையைப் பேசிய இப்படம் மோகன்லாலின் நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எம்புரான் படத்தைத் தொடர்ந்து இப்படமும் மோகன்லாலுக்கு ரூ. 200 கோடி வசூல் படமாக அமைந்தது திரைத்துறையினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் துடரும் திரைப்படம் இன்று அதிகாலை வெளியானது.

மலையாளம் தவிர்த்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.