

பணமோசடி புகாரில் சின்ன திரை நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருணாநிதி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சின்ன திரை நடிகர் தினேஷை பணகுடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 2022ல் அரசு வேலை வாங்கித் தருவதாக நடிகர் தினேஷ் ரூ. 3 லட்சம் பெற்றதாகவும், அதனைத் திருப்பி கேட்டபோது, அவர் தராமல் அலைக்கழித்தாகவும் கருணாநிதி என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் நடிகர் தினேஷை பணகுடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பணமோசடி புகார் தொடர்பாக தினேஷ் மீது, வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் தினேஷ். பிக் பாஸ் 7வது சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பணமோசடி விவகாரத்தில் நடிகர் தினேஷ் கைதான தகவல் சின்ன திரை ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: பாட்டியாக நடித்த ரோஜா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.