

நடிகர் ரஜினி படத்திலிருந்து இயக்குநர் சுந்தர் சி விலகியது சமூக வலைதளத்தில் கேலி, கிண்டல்களை உருவாக்கியுள்ளன.
இந்த சம்பவத்தில் குஷ்புவை தொடர்புப்படுத்தி, ஆபாசமான கிண்டல்கள் நடந்து வருகின்றன. இதற்கு நடிகை குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினியை வைத்து தலைவர் 173 படத்தினை சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. பின்னர், திடீரென சுந்தர் சி படத்திலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த எதிராபாராத நிகழ்வுகளினால், சமூக வலைதளத்தில் சுந்தர் சி, ரஜினி மீது கேலி, கிண்டல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தப் படத்தில் ரஜினி குத்துப் பாட்டுக்கு குஷ்பு வேண்டுமென கேட்டதால்தான், சுந்தர் சி விலகியதாக மீம்ஸ்களில் கிண்டலாக கருத்துகள் பரவின.
இந்தக் கருத்தைப் பதிவிட்ட நபரின் பதிவுக்கு நடிகை குஷ்பு, “ இல்லை. உங்கள் வீட்டில் இருந்து யாரையாவது ஆட வைக்கலாம்னு நினைத்து...” எனப் பதிலளித்துள்ளார்.
இந்தப் பதில் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.