நடிகர் ரஜினிகாந்த் - 173 திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தன் 173வது திரைப்படமாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
கூலி, ஜெயிலர் - 2 ஆகிய திரைப்படங்கள் ஆக்சன் படங்கள் என்பதால் அடுத்த திரைப்படத்திலாவது ஜனரஞ்சகமாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் சுந்தர். சி படத்தில் ஒப்பந்தமானார்.
ஆனால், சுந்தர் சி அப்படத்திலிருந்து விலக, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி 173-வது படத்தை இயக்குகிறார்.
இந்த நிலையில், ரஜினி - 173 திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்த, தி அவுட்பிட் (the outfit) திரைப்படத்தின் தழுவலாகவே உருவாகவுள்ளதாகவும் இதில் தையல்காரர் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
actor rajinikanth's thalaivar 173 movie might remake of the outfit movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
