ஜன நாயகன் படத்தின் முக்கிய அறிவிப்பு!

ஜன நாயகன் படத்தின் முக்கிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 ஜன நாயகன்
ஜன நாயகன்
Updated on
1 min read

ஜன நாயகன் படத்தின் முக்கிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்ததுள்ளதால் உறுதியாக பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய பாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். இப்படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜன நாயகன் படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி பாடல் விஜய் குரலில் வெளியானது.

இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று(நவ. 21) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்துவரும் ஜன நாயகன், அவரின் கடைசிப் படம் என்பதால், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

Summary

The production company has made an important announcement about the film Janyayan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com