தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

கில் ரீமேக்கிலிருந்து விலகிய துருவ் விக்ரம்?

கில் படத்திலிருந்து துருவ் விலகியதாகத் தகவல்...

துருவ் விக்ரம்

Published On :

ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனம்பெற்ற கில் படத்தின் தமிழ் ரீமேக்கிலிருந்து துருவ் விக்ரம் விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹிந்தியில் கரண் ஜோஹர் தயாரிப்பில் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில் (kill). 120 நிமிடங்களுக்கும் குறைவான நேரங்களே கொண்ட இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனிக்கு அழைத்துச் சென்றதால் இந்தியாவில் உருவான சிறந்த ஆக்சன் படங்களில் ஒன்று என பாராட்டுகளைப் பெற்றது.

இதில் நாயகனாக லஷ்யா லால்வானி முக்கிய கதாபாத்திரத்தில் ராகவ் ஜுயல், தன்யா மணிக்த்லா, ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையைப் பெற்ற ரமேஷ் வர்மா தமிழ் ரீமேக்கில் நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் தமிழ் ரீமேக்கில் நடிகர் துருவ் விக்ரம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.

பைசன் திரைப்படத்தைத் தொடர்ந்து இதன் படப்பிடிப்பில் துருவ் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்த தகவல்படி, இப்படத்திலிருந்து நடிகர் துருவ் விலகிவிட்டாராம். பைசன் நல்ல பிம்பத்தைக் கொடுத்திருப்பதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது.

Summary

actor dhruv vikram out from kill tamil remake

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.