துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இறுதியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப் படமானது.
முழுநேர அரசியலுக்கு வந்ததும் சினிமாவிலிருந்து விலகினார். தற்போது, உதயநிதியின் மகன் இன்பநிதி நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார். அதன் விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
மேலும், அண்மையில் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்பநிதி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகவும் இவரின் முதல் திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதியின் கடைசி திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். தற்போது, இன்பநிதியின் முதல் படத்தை மாரி இயக்கவுள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: அரசனில் இணையும் பிரபலங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.