

மலையாள நடிகர் ஷேன் நிகாமின் நடிப்பில் உருவாகியுள்ள, “ஹால்” திரைப்படத்தில் இருந்து மாட்டிறைச்சி காட்சியை நீக்க வேண்டுமென மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் வீர் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், “ஹால்”. இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழை பெறுவதற்காக, படக்குழுவினர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், ஹால் படத்தில் இருந்து மாட்டிறைச்சி பிரியாணி (பீஃப்) சாப்பிடும் காட்சி மற்றும் துவாஜா பிரானமா எனும் வசனம்; ஆகியவற்றை நீக்க வேண்டுமென மத்திய தணிக்கை வாரியத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், படக்குழுவினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதால், “ஹால்” திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்தக் காட்சி மற்றும் வசனத்தை நீக்கினால் படத்தின் கதையை அது மாற்றக்கூடும் எனக் கருதும், படக்குழுவினர், தணிக்கை வாரிய அதிகாரிகளின் உத்தரவை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
முன்னதாக, “ஹால்” திரைப்படம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 12 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு; பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிக்க: ஐஸ்வர்யா ராயுடன் மோதிய அழகி! இப்போது ஏன் இமாலயத்தில் இருக்கிறார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.