கலைமாமணி விருதுபெற்ற கலைஞர்கள்!

கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன...
sai pallavi received award from cm
முதல்வரிடம் விருதுபெற்ற நடிகை சாய் பல்லவி
Published on
Updated on
1 min read

தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தமிழக அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது.

2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரதியார் விருது (இயல்) விருது, முனைவர் ந. முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸுக்கும் பாலசரசுவதி விருது (நாட்டியம்) விருது, பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கு வழங்கப்பட்டது.

மேலும், நடிகர்கள் மணிகண்டன், எஸ். ஜே. சூர்யா, சாய் பல்லவி, விக்ரம் பிரபு, இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகளும் வழங்கப்பட்டன.

Summary

actors received kalaimamani awards from tamilnadu cheif minister m.k.stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com