
தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் தமிழ்ப்படங்களுக்கு ஆங்கில பெயர்களே வைக்கப்பட்டிருக்கின்றன.
தீபாவளி வெளியீடாக பல ஆண்டுகளாக நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பிரபலங்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன.
ஆனால், இந்தாண்டு ஆச்சரியமாக எந்த பெரிய நாயகர்களின் திரைப்படமும் தீபாவளி வெளியீட்டில் இல்லை. முதல் முறையாக இளம் கதாநாயகர்களின் படங்களே திரைக்கு வருகின்றன.
அதிலும், ஆச்சரியமாக ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரமின் பைசன் ஆகிய திரைப்படங்களுக்கு ஆங்கிலத்திலேயே பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. முதல்முறையாகத் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் இந்த 3 படங்களுக்கும் ஆங்கில பெயர்கள்தான்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை தமிழ் பெயர் கொண்ட நல்ல கதையம்சமுள்ள படங்களுக்கு வரி விலக்குகள் கிடைத்தன. ஆனால், இப்போது அந்த விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இளம் தலைமுறையினரை ஈர்க்கவும் பான் இந்தியளவில் கவனிக்கவும் ஆங்கில பெயர்களே வசதியாக இருப்பதால் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன!
இதையும் படிக்க: ரஜினியின் அடுத்த பட இயக்குநர் இவரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.