
பழம்பெரும் பாடகி பாலசரஸ்வதி தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (அக். 15) காலமானார்.
பழம்பெரும் பாடகி மற்றும் நடிகையான பாலசரஸ்வதி தேவி (வயது 97), வயது மூப்பினால் கடந்த 2 - 3 நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவர், தெலுங்கு திரையுலகின் முதல் பின்னணி பாடகி எனக் கூறப்படுகிறது. “சதி அனுசுயா” எனும் திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமான பாலசரஸ்வதி தேவி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 2,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்த நிலையில், பாடகி பாலசரஸ்வதி தேவியின் மறைவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான பாலசரஸ்வதி தேவி, ஆல் இந்தியா ரேடியோவில் ஏராளாமான பாடல்களை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஏகே - 64 அறிவிப்பு எப்போது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.