
பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து பாலிவுட் இசையமைப்பாளர் சஷ்வத் சச்தேவ் பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சஷ்வத் சச்தேவ், ‘உரி: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’, ‘கில்’ ஆகிய வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ‘விர்டீ’ எனும் தொலைக்காட்சித் தொடருக்கு சஷ்வத் சச்தேவ் இசையமைக்கின்றார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்டங்களைக் கடந்து இசையமைப்பதில் மிகவும் மகிழ்ச்சி எனவும், மும்பையிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் வந்தாலும் அதே இதய துடிப்புதான் எனவும்; நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, இயக்குநர் நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் உருவாகும், ராமாயணா படத்த்துக்கு இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விஜே பார்வதி இல்லாமல் பிக் பாஸ் -9 புரோமோ! கமுருதீன் - துஷார் மோதல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.