

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரின் தெலுங்கு மொழி மறுஉருவாக்கத்தில் நடிகர் தீபக் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஈரமான ரோஜாவே, என்றென்றும் புன்னகை மற்றும் மனசெல்லாம் போன்ற வெற்றித் தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்த தீபக், தற்போது தெலுங்கு மொழியிலும் நேரடியாக நாயகனாக நடிக்கவுள்ளார்.
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் பரமேஸ்வரி ரெட்டிக்கு நாயகனாக கரிகாலன் என்ற பாத்திரத்தில் தீபக் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் தீபக்கின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் இந்த ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
சொந்தமாக ஸ்டூடியோ நடத்திவரும் தீபக், நடிப்புத் துறையில் முழுநேரமாக கவனம் செலுத்தி வருகிறார். குறும்படங்களிலும் இணையத் தொடர்களிலும் நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கு மொழியில் நேரடியாக நடிக்கவுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அய்யனார் துணை தொடரில் எதிர்நீச்சல் புகழ் மதுமிதா நாயகியாக நடித்துவரும் நிலையில், தெலுங்கில் தீபக்கிற்கு நாயகியாக நடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடிப்பின் மூலமும் வசீகரமான தோற்றத்தின் மூலமும் ரசிகர்களைக் கவர்ந்த தீபக், கயல் தொடரில் நடித்துவரும் நடிகை அபிநவ்யாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | மயில்சாமியின் மகன் நடிக்கும் புதிய தொடர்! சுற்றும் விழிச் சுடரே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.